×

அரசு அறிவுறுத்தியும் ஊராட்சி எழுத்தர் மீண்டும் வழங்கப்படவில்லை: தஞ்சாவூர் கூடுதல் கலெக்டரிடம் திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் புகார்

தஞ்சாவூர், மே 9: விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று திரும்பிய தனக்கு மீண்டும் ஊராட்சி எழுத்தர் பணி வழங்க அரசு அறிவுறுத்தியும் உத்தரவிட்டும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் திருநல்லூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:
நான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த திருநல்லூர் ஊராட்சியில் கடந்த 05.12.1996 முதல் 2004-ம் ஆண்டு வரை ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வந்தேன்.

தொடர்ந்து விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று திரும்பினேன். இதற்கிடையில் அப்போதைய ஊராட்சித்தலைவர் எனக்கு பதிலாக வேறு ஒருவரை பணி நியமனம் செய்தார். பின்னர் எனது நிலை குறித்து கலெக்டர் அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தேன். இந்நிலையில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளேன். எனவே எனக்கு மீண்டும் ஊராட்சி எழுத்தர் பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post அரசு அறிவுறுத்தியும் ஊராட்சி எழுத்தர் மீண்டும் வழங்கப்படவில்லை: தஞ்சாவூர் கூடுதல் கலெக்டரிடம் திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Thirunallur ,Thanjavur ,Panchayat ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...